நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கட்டிபாளையம், மடத்துபாளையம், சினிய கவுண்டன் பாளையம், தொப்பம்பட்டி, ரங்கம்பாளையம், தேர்பாதை, உப்பாறு அணை, குண்டடம் உள்ளிட்ட 16 கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றர். இவர்களுக்கு சுண்ணாம்பு காட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அரசு குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலகத்தில் சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் குடிநீர் திட்ட அதிகாரிகள் தாராபுரம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சேதமடைந்ததை கண்டுபிடித்தனர். இதை சரி செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் பறித்து குடிநீர் உடைப்பை சரி செய்வதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உள்ள அலுவலர் உதவி கோட்ட பொறியாளர் கணேஷ் மூர்த்தி இடம் மனு அளித்தனர் .அதன் பேரில் எந்த நடவடிக்கும் எடுக்காததால் வாட்டர் போர்டு அதிகாரிகளும் உதவி கோட்ட பொறியாளர் கணேஷ் மூர்த்தியிடம் நேரில் சந்தித்து கேட்டபோது உங்களுக்கு பதில் அளிப்பதற்காக நான் இல்லை என்னிடம் பேசுவதற்கு கலெக்டர் ரேஞ்சில் இருப்பவர்கள் தான் உங்கள் வாட்டர் போடு இருக்கும் லட்சணம் எனக்கு தெரியாதா என்று பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை யாரும் இங்க இருக்க கூடாது வெளியே போங்க என்று ஒருமையில் திட்டினார் என பேசிதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கணேஷ் மூர்த்தி கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.