காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்
காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே காந்தியின் தெரு உருவச்சிலை அமைந்துள்ளது. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் திருவுருவ சிலைக்கு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நகர அவை தலைவர் கதிரவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசு ஆகியோர் காந்தியின் திருவுருவச் சிலைக்கும், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவ சிலைக்கும், காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காந்தி அஹிம்சை வழியில் போராடியவர் அவர் வழியில் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அவர் வாழ்ந்த நடைமுறைகளை பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ராஜேந்திரன், பிரபாவதி பெரியசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார்,செய்தி தொடர்பாளர் முருகானந்தம் ,திருப்பூர் கலைமாமணி கலாராணி,நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காணபிரியா, அசோக்குமார் , வரப்பாளையம் முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.