மங்கலம்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம். அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). ஊராட்சி மன்ற தலைவர். இவரது தங்கை அமுதா என்பவர் தன் வீட்டிற்கு எதிரில் மண் கொட்ட சொன்னதால் டிராக்டரில் மண் வந்தது. அப்போது அப்பகுதியில் மழை பெய்ததால் சேரும் சகதியுமாக ஆகிவிட்டது என கூறி அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (38), வாசுதேவன், வாசுதேவன், சண்முகப்பிரியா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அமுதாவை அசிங்கமாக திட்டினார்கள். இதனை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப் பிரச்சனையில் இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரியசாமியும் குணசேகரனும் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் குணசேகரன், வாசுதேவன், சண்முகப்பிரியா மற்றும் பெரியசாமி, அவரது மகன் விஜயகுமார், விஜி, முகில், அமுதா, முனியன் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.