கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., தலைமையில் அலுவல் பணிகள் குறித்த மீளாய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், எமிஸ் எனும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடும் பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளை மேம்படுத்துதல் குறித்து சி.இ.ஓ., அறிவுறுத்தினார். மேலும் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் புதியதாக எடுத்தல், புதுப்பித்தல், வங்கி கணக்கு துவங்குதல், தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறை துவங்குதல் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதிலிமிருந்து, அனைத்து டி.இ.ஓ.,க்கள், உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.