அண்ணா நகர் திமுக கவுன்சிலரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்
கோரிக்கை மனு வழங்கினர்
பல்லடம் அண்ணா நகர் 12வது வார்டு திமுக கவுன்சிலரை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து அண்ணா நகர் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. அண்ணா நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அங்குள்ள வீதிகளுக்கு காங்கிரட் சாலை அமைக்க வேண்டும், கழிவு நீரை ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி அதை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்ற வேண்டும்,அண்ணா நகரில் உள்ள குட்டையை ஆறு மாதங்களுக்குள் தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.