வடக்கு பாளையம் புதூர் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க கூடாது
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நாசுவம் பாளையத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வடுகபாளையம் புதூர் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க கூடாது பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூர் பகுதியில் அமைய உள்ள சுங்கச்சாவடி மையத்திலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாகனங்களுக்கு கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும் வடுகபாளையம் புதூர் ஊராட்சி பகுதி மிக வரட்சியான பகுதி இங்கே விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை விசைத்தறி ஆகியவைதான் முக்கிய தொழிலாக உள்ளது நாள்தோறும் சுங்கவரி கொடுத்து வாகனத்தை இயக்க முடியாத காரணத்தினால் இந்த பகுதியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரிவிளக்கு அளித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் பல்லடம் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி பகுதியில் அமைக்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது