பகண்டைகூட்ரோட்டில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. பகண்டைகூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க மாநில குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஓய்வு பெற்ற கால்நடை இயக்குனர் குபேந்திரன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் ஸ்டாலின் மணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஏழுமலை, செயலாளர் பெருமாள் பங்கேற்று பேசினர். கறிக்கோழி சங்கங்கள் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பது குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கோழி வளர்ப்பு கூலியை முத்தரப்பு பேச்சு மூலம் நிர்ணயம் செய்ய வேண்டும், கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வங்கி கடன், காப்பீட்டு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.