கடம்பூர் அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

கடம்பூர் அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

Update: 2024-10-04 05:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடம்பூர் அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம் கடம்பூர் அருகே உள்ள நகலூர் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 50). கூலித்தொழி லாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சிறிது தூரத் தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் இருந்த கரடி திடீரென மாதப்பன் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் பயத்தில் அவர் சத்தம் போட்டு அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த னர். இதை கண்டதும் கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. கரடி தாக்கியதில் மாதப்பன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக் காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Similar News