திருப்பத்தூர் மாவட்டத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்கள் செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்கள் செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்

Update: 2024-10-04 06:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற 59 மாணவர்கள் செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் தமிழகம் முழுவதும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்று வந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள சென்னை மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 25,000 பேர் ஐந்து பிரிவுகளில் 32 போட்டிகளில் விளையாடி 2500 பேர் வெற்றி பெற்ற நிலையில் இன்று முதல் கட்டமாக கால்பந்து இறகு பந்து ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து 59 வீரர்கள் வீராங்கனைகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் பேருந்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்து வீர வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை கூறி அனுப்பி வைத்தார் உடன் துறை சார்ந்த அதிகாரிகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் இருந்தனர்

Similar News