நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு, இன்று ஆஜராக வந்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனாவுக்கு திடீரென மாரடைப்பு!

அவரது உடலில் இரத்தக்குழாய் அடைப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சந்தீப் சக்சேனா சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

Update: 2024-10-04 08:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல்லில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக, இன்று ஆஜராக வந்த, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் தமிழ்நாடு காகித ஆலையின்(TNPL) மேலாண் இயக்குநருமான சந்தீப் சக்சேனாவுக்கு, மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு, மயக்கமடைந்தார்.அப்போது உடனடியாக அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரது உடலில் இரத்தக்குழாய் அடைப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சந்தீப் சக்சேனா சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கு ஒன்றிற்காக நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா திடீரென மயக்கம் அடைந்தது நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News