கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை; எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்

Update: 2024-10-04 08:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- மயிலாடுதுறையில் நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறும். இந்த 30 நாட்களும் துலா கட்ட காவிரியில் கங்கை, யமுனை சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள் இங்கு வந்து காவிரியில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் (துலா மாதம்) 30 நாட்களும் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஐப்பசி 30 ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இந்த உற்சவத்திற்கு காவிரியின் இரு கரையிலிலும் ஐந்து கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் காவிரி வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசி விசுவநாதர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளும் இடத்திற்கு கொட்டகை இல்லாததால் மயிலாடுதுறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தகர ஷெட்டு மற்றும் ஃபேவர் பிளாக் தரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி ஷெட் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News