ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு

குமாரபாளையம் அருகே ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Update: 2024-10-04 16:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேரளா மாநிலம், திருச்சூரில் வங்கி ஏ.டி.எம்.களை கொள்ளையடித்துவிட்டு, கண்டெய்னர் லாரியில் தப்பி வந்த கொள்ளையர்களை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவன் உயிரிழந்தான். மற்றொருவன் தப்பியோட முயற்சிக்க, அவனை காலில் சுட்டு பிடித்தார். இதில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் தவமணி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ. ரஞ்சித் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இவர்கள் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களை எஸ்.பி. ராஜேஷ்கண்ணா, டி.எஸ்.பி. இமயவரம்பன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் தவமணிக்கு குமாரபாளையம் நகர எல்லையான கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

Similar News