வளர்ச்சி திட்டம் மற்றும் டெங்கு ஒழிப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு.

Update: 2024-10-05 11:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் செயல்பட்டு வரும் முதல் நிலை நூலகத்தின் முதல் தளத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிதாக கூடுதலாக படிப்பறை (study hall) அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டு, இளைஞர்கள் படிப்பதற்கு உகந்த சூழலில் ஏற்படுத்தும் வகையில் தரமான முறையில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கார்கூடல்பட்டி ஊராட்சி, கருங்குட்டைகாடு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் டெங்கு ஒழிப்புப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் தேங்கும் பகுதிகள் வீடுகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டவரும் தூய்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து மற்றும் கிருமி நாசினி தெளிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாவல்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் மங்களபுரம் வேம்பிலைப்பட்டி சாலை முதல் நாவல்பட்டி காட்டூர் சாலை வரை புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் திருமலை பட்டி ஊராட்சியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, பள்ளக்காடு பகுதியில் நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News