தாண்டிக்குடி பூலத்துாரில் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து விபத்து அபாய நிலையில் செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஒ , அலுவலகம் கட்டமைக்கப்பட்டது. தற்போது கூரை சேதமடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை நீர் உட்புகுந்து அலுவலக கோப்புகளை பாதுகாக்க முடியாத நிலை, புதர் மண்டி விஷ , பூச்சிகள் நடமாட்டத்துடன் அலுவலகம் செயல்படுகிறது. நாள்தோறும் பொதுமக்கள் வருவாய் துறை சம்பந்தமான விவரங்களுக்கு வருகை தரும் நிலையில் அச்சுறுத்தலாக உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.