காந்திகிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் குறித்து ஜோதிந்திரன் விளக்கம்.

காந்திகிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் குறித்து ஜோதிந்திரன் விளக்கம்.

Update: 2024-10-07 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காந்திகிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் குறித்து ஜோதிந்திரன் விளக்கம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, காந்திகிராமம் பகுதியில் உள்ள மைதானத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, லோக மாதா ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அமைப்பின் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று அக்டோபர் 6-ம் தேதி மாலை 6மணி அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பாஜக ஓபிசி அணி துணைத்தலைவர் சிவசாமி, மாவட்ட பாஜக துணை தலைவர்கள் ஆறுமுகம், செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் முருகானந்தம், முன்னாள் செய்தி தொடர்பாளர் மாரிமுத்து, கரூர் மாநகர தலைவர் சுகுமார் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கப்பட்டதின் நோக்கம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடுமைகள் குறித்தும், அதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் செயல்பாட்டின் தாக்கம் குறித்தும், இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை காக்கும் செயல்பாட்டில் ஆர் எஸ் எஸ் இன் பங்கு குறித்தும் ஆர் எஸ் எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிந்திரன் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அதிகப்படியான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News