தோட்டக்குறிச்சி- செங்கல் சூளையை இடித்து அகற்றிய அதிகாரிகள். கதறி அழுத பெண்கள்

தோட்டக்குறிச்சி- செங்கல் சூளையை இடித்து அகற்றிய அதிகாரிகள். கதறி அழுத பெண்கள்

Update: 2024-10-07 14:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தோட்டக்குறிச்சி- செங்கல் சூளையை இடித்து அகற்றிய அதிகாரிகள். கதறி அழுத பெண்கள் கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, நன்செய் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்று பகுதியில் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூர் கழக அதிமுக துணை செயலாளர் செல்வராஜ் என்பவருக்கும் ஒரு செங்கல் சூளை உள்ளது. காவிரி ஆற்றில் அண்மைக்காலமாக நடைபெறும் மணல் கொள்ளை குறித்து செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணல் கொள்ளையர்களுக்கும் செல்வராஜுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன், செல்வராஜ் நடத்தி வரும் செங்கல் சூளை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி இன்று இடித்து அகற்றி தரைமட்டம் ஆக்கினார்.இதனால் அங்கு பணிபுரிந்து வந்த பெண்கள் கதறி அழுதனர். ஆயினும் அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தாமல் இடித்து அகற்றும் வேலையில் மும்முரமாக செயலாற்றினர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட செல்வராஜ் கூறும் போது, காவிரி ஆற்று படுகையில் என்னைப் போலவே பலரும் இங்கு செங்கல் சூளை தொழிலை செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நடைபெறும் மணல்கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததன் காரணமாகவே, ரூபாய் ஒரு கோடி பொறுமானம் உள்ள எனது செங்கல் சூளையை இடித்து அகற்றி உள்ளனர் என கூறினார்.

Similar News