தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் குமாரபாளையத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு,அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்தி, மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் ஸ்டாலினின் தி.மு.க அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க கழகத்தின் சார்பில் குமாரபாளையத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம், முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான தங்கமணி தலைமையில் நடந்தது. இந்த கண்டன மனித சங்கிலி போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் குமரேசன், நகர செயலாளர் பாலசுப்பிரமணி, முன்னாள் நகர செயலர் குமணன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: தி.மு.க அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்து வரிகளை உயர்த்தி வருகிறது... ஊராட்சி மன்றங்களை நகராட்சிகளோடு இணைக்க தி.மு.க.வினரே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அ.தி.மு.க என்பது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு இருக்கும் இயக்கம். அதன் காரணமாகத்தான் மக்களுக்காக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது. திமுக அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் வரிகளை மட்டும் உயர்த்தி வருகிறது..கடந்த 10 ஆண்டு கால அ..தி.மு.க ஆட்சியில் எந்த வரிகளும் உயர்த்தப்பட வில்லை... குறிப்பாக கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயராமல் இருந்தது. தி.மு.க அரசு தேர்தல்களில் பெற்ற வெற்றிக்கு, மக்களுக்கு தந்த பரிசு என்னவென்றால் வரி உயர்வு மட்டும் தான் .. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று முடிந்தன..தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை என்பது அமோகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளின் அருகிலேயே விற்பனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் சந்து கடைகளும் அதிகரித்து விட்டன. 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து கொண்டு உள்ளது. இதனை கண்டிக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை..கடந்த அ.தி.முக ஆட்சியில் சந்து கடைகளும் இல்லை கஞ்சா பொருட்களும் இல்லை. இந்த கண்டன மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனியாவது தி.மு.க அரசு உயர்த்திய வரிகளை குறைக்க வேண்டும். சென்னையில் நடைபெற்ற விமான கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளையும், பாதுகாப்பு மருத்துவ வசதிகளையும் இந்த அரசு ஏற்படுத்தவில்லை. கடந்த 2003ம் ஆண்டு நடத்தப்பட்ட போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உரிய முறையில் அனைத்து ஏற்பாடுகளை செய்து இருந்தார்.... இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டமானது தி.மு.க அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.