குமரி : போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவட்டார் அருகே

Update: 2024-10-08 14:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நாகர்கோவிலியை  சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி (56) என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மது அருந்திவிட்டு வகுப்பறைகளுக்கு வருகை தருவதாகவும்,  மாணவ மாணவிகளுக்கு முறையாக  பாடம் எடுப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.        இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்து, பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது தொடர்பாக முறையிட்டனர். காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அவரை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.         நேற்று (7-ம் தேதி)  காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போது தமிழாசிரியர் ஜார்ஜ் ஹென்றி பள்ளிக்கு வருகை தந்திருந்தார். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் நேற்று பள்ளியில் குவிந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.         இந்த நிலையில் தமிழாசிரியர் ஜார்ஜ் ஹென்றி  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை அலுவலர் பால தண்டாயுதபாணி இன்று ( 8-ம் தேதி) தெரிவித்தார்.

Similar News