மதுராந்தகம்:தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு

தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு;

Update: 2024-10-08 14:40 GMT
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவராத்திரி கொலு சிறப்பாக வைக்கப்பட்டிருப்பதால் தினசரி பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வருடம் தோறும் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 2-ஆம் தேதி கொலு வைக்கப்பட்டது. இந்த கொலுவில் அறுபடை முருகன் கோயில்கள்,கேதர்நாத், அமர்நாத் பனிலிங்கம், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தேர் மற்றும் அன்றாட வாழ்வில் பொதுமக்களோடு இணைந்துள்ள அம்சங்கள் உள்ளிட்டவை கொலுவில் இடம்பெற்றுள்ளன. மேலும்,மாலை நேரங்களில் பரதநாட்டியம், பக்தி பாடல்கள்,இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளியின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவினை பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் பொதுமக்களும் தினசரி பார்த்து ரசித்து வருகின்றனர்.

Similar News