மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க நடைபயண பேரணி

மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க நடைபயண பேரணி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி பங்கேற்பு;

Update: 2024-10-08 14:37 GMT
மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க  நடைபயண பேரணி
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தி அவர்களின் 155 - வது பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49-வது நினைவு நாள் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120வது பிறந்தநாள் என முப்பெரும் விழா முன்னிட்டு தமிழக முழுவதும் மத நல்லிணக்க நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த மத நல்லிணக்க நடைபயணத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படாளம், கருங்குழி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் சத்தியசீலன், முகமது ஜாவித்,கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மத நல்லிணக்க நடைபயண பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு மத நல்லிணக்க நடைபயணத்தை துவக்கி வைத்தனர். இந்த மத நல்லிணக்க நடைபயணத்தில் மத்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன், ராதாகிருஷ்ணன், கிறிஸ்டோபர் ஜெயபால்,மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் கோட்டை தயார் செந்தில் அவர்களும் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி வேல்விழி , விவசாய அணி தலைவர் கோதண்ட ராமன் ,வழக்கறிஞர் அய்யனாரப்பன் ,விநாயகம் ,கிருஷ்ணன், லோகு மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News