பாட்டாளி மக்கள் கட்சியினர் மனித சங்கிலி இயக்கம் நடத்தினர்

மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனித சங்கிலி இயக்கத்தை நடத்தினர்

Update: 2024-10-09 12:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி இயக்கம் பள்ளிபாளையம் அக்டோபர் 9 முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56-வது பிறந்தநாளை ஒட்டி பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனித சங்கிலி இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விளக்கும் வகையில் குடும்பத்தை அளிக்கும் மது அரக்கனை ஒழிப்போம்! சாராயக் கடைகளை திறந்து சாவுக்கு துணை போகாதே,! மனிதனாய் வாழ்வதற்கு போதை தரும் மதுவை ஒழித்துவிடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்,பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் மது ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் பழனியப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கராத்தே சேகர், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் , நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் ,நகர தலைவர் மெக்கானிக் ராஜா, ஆர்.சி.முருகேசன், அரிமா ராஜேந்திரன் ,வழக்கறிஞர் மகாலிங்கம், சின்னதுரை, இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன்,, மாணவரணி தலைவர் வேல்முருகன் ,பன்னீர் ,அண்ணாமலை, காளிதாஸ், மணி, மாணிக்கம் மஹால் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக இந்த மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்றனர்...

Similar News