புகையிலை பொருட்கள் விற்ற வழக்கில் இருவர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்

Update: 2024-10-14 13:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் அங்காளம்மன் கோயில் பகுதி மற்றும் ஆனங்கூர் சாலை பரமகவுண்டர் நகர் பகுதி ஆகிய இடங்களில் விற்பதாக அறிந்து, நேரில் சென்ற போலீசார், மூவாயிரம் மதிப்பிலான 125 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இதனை விற்ற மாதேஸ்வரன், 56, ராமலிங்கம், 60, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News