வெளிமாநில லாட்டரி விற்ற வழக்கில் நால்வர் கைது

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-10-14 13:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்ற விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. பழனிசாமி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காட்டூர் விட்டலபுரி பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த சசிகுமார், 27, பிரபு, 38, மணிகண்டன், 27, நாகராஜ், 24, ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News