அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அருகே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-10-15 15:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, யோகாசனம் மற்றும் நாடகம் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. அப்துல்கலாம் பிறந்தநாளில் தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர் சொல்படி நடப்போம் என மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் சீனிவாசன், பூபேஷ், அங்கப்பன், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News