உலகளாவிய கை கழுவுதல் தினம்
குமாரபாளையத்தில் உலகளாவிய கை கழுவுதல் தினம் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் உலகளாவிய கை கழுவுதல் தினம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கை கழுவுதல் தினம் அமைந்ததையும், அதனால் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தடுப்பதற்காக சோப்புடன் கை கழுவுவதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இது பற்றி செயலர் பிரபு பேசியதாவது: கைகளை கழுவுவதற்கான முக்கிய நேரம் என்பது உணவு உண்பதற்கு முன்னும் பின்னும், கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு, செல்லப்பிராணி உணவு அல்லது செல்லப்பிராணி உபசரிப்புகளை கையாண்ட பிறகு, குப்பையை தொட்ட பிறகு என முக்கிய நேரங்களில் கைகளை கழுவுவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார். தினந்தோறும் சோப்புகளை உபயோகப்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்வோம், உடல் நலத்தை பேணி காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் வைரக்கண்ணன், சரண்யா, ரேகா உள்பட பலர் பங்கேற்றனர்.