கரும்பு வெட்டும் விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது
பள்ளிபாளையத்தில் கரும்பு வெட்டும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கம் பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை ஏரியா கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று குமாரபாளையத்தில் மாநில குழு உறுப்பினர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் தர்மபுரி முருகன், மாநில செயலாளர் சி.துரைசாமி,,, இடதுசாரி இயக்கத்தின் தலைவர் என்.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் உட்பட கரும்பு சங்கங்கள் கரும்பு வெட்டும் கூலியை மாநில அளவில் தீர்மானித்திட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.பல போராட்டங்களும் நடத்தப்பட்டன. 2023-24 கரும்பு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டும் கூலியை மாநில அளவில் தீர்மானித்து சர்க்கரை துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தீர்மானிக்கப்பட்ட வெட்டுக்கூலியை வாகன வாடகையுடன் சேர்த்து சர்க்கரை ஆலைகள் கொடுத்து விட்டு விவசாயிகளின் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.அதாவது 3 கி.மீ முதல் 10 கி.மீ வரை வெட்டுக்கூலி வாகன வாடகை ரூ.572/ முதல் ரூ.595/ வரை.. 11 கி.மீ முதல் 20 கி.மீ வரை H&T ரூ.600/ முதல் ரூ.642/ வரை.. 21 கி.மீ முதல் 30 கி.மீ வரை H&T ரூ.647/ முதல் ரூ.690/ வரை.. 31 கி.மீ முதல் 40 கி.மீ வரை H&T ரூ.695/ முதல் ரூ.737/ வரை.. 41 கி.மீ முதல் 50 கி.மீ வரை H&T ரூ.741/ முதல் ரூ.784/ வரை.. 51 கி.மீ முதல் 75 க.மீ வரை H&T ரூ.789/ முதல் ரூ.909/ வரை.. என்று கரும்பு வெட்டும் கூலியும் வாகன வாடகையும் சேர்த்து தீர்மானிக்கப்பட்டது. சில சர்க்கரை ஆலைகள் வட கர்நாடகாவில் டன்னுக்கு நூறு ரூபாய் கூடுதலாகவும், தென் கர்நாடகாவில் டன்னுக்கு ரூ.200/ கூடுதலாகவும் பிடித்தம் செய்தனர். கூடுதலான பிடித்தம் செய்த பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிட கோரி கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ரேணுகா சர்க்கரை ஆலை விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்பட்டது. ரேணுகா சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50/ ஐ விவசாயிகளுக்கு திரும்ப கொடுத்து விட்டது. தமிழ்நாட்டிலும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சர்க்கரை துறை ஆணையர் மாநில அளவில் வெட்டுக்கூலி உத்தரவை பிறப்பித்திட வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மனு கொடுத்துள்ளது.இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மான மனுக்களை பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு, திருச்செங்கோடு கோட்டாட்சியர் அவர்களுக்கும் நேரில் சந்தித்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.நிறைவாக சங்க மாவட்ட செயலாளர் குருசாமி நன்றி கூறினார்..