சங்கரன்கோவிலில் கால்வாயில் தூா்வாரும் பணிகள் நடைபெற்றது
கால்வாயில் தூர்வாரும் பணியை எம்பி ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடைகள், வாருகால் போன்றவற்றை தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 29 ஆவது வாா்டில் உள்ள கிணற்றிலும் தூா்வாரும் பணி நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் சபாநாயகம், பொறியாளா் இா்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், உதவி பொறியாளா் ராம்மோகன், மேற்பாா்வையாா் காந்தி, சுகாதார ஆய்வாளா் கைலாசம், கருப்பசாமி, நகா்மன்ற உறுப்பினா் அலமேலு, திமுக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.