நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று பாபநாசம் நோக்கி சென்றது. இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த மூன்று பேருக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துனர் கணேசன் மண்டையை உடைத்துள்ளனர். இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மீதி இருவர் தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்டவரிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்