தமிழ்நாடு முதல்வர் வருகையை ஒட்டி நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்.

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 22.10.2024 ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகை புரி இருப்பதால் நாமக்கல் மாநகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

Update: 2024-10-19 17:50 GMT
தமிழக முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு 22.10.2024 ம் தேதி செவ்வாய் கிழமை பல்வேறு அரசு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக வருகைபுரிய இருப்பதால் நாமக்கல் மாநகரின் முக்கிய சாலைகளில் 22.10.2024 ம் தேதி காலை 07.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை கனரக வாகனங்களும் காலை 09.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை மற்ற வாகனங்களும் கீழ்கண்டவாறு செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்பதை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு காவல் துறை மூலம்தெரிவித்து கொள்ளப்படுகிறது. சேலத்திலிருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் புதன்சந்தை வழியாக சேந்தமங்கலம் கொசவம்பட்டி வழியாகவும், திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் நல்லிபாளையம் நயாரா பெட்ரோல் பங்க்,பொய்யேரிக்கரை, உழவர்சந்தை, பார்க் ரோடு வழியாகவும் மோகனூரில் இருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் அய்யப்பன் கோவில் வலது புறமாக SBI வங்கி வழியாக திருச்சி ரோடு வழியாகவும், பரமத்தியில் இருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் ATC டிப்போ வழியாக இடதுபுறமாக திரும்பி பொய்யேரிக்கரை உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாகவும், திருச்சியில் இருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் வழக்கமான வழியிலும் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 2) அனைத்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், கடைகளின் உரிமையாளர்கள் திருச்சி ரோடு, பரமத்தி ரோடு,திருச்செங்கோடு ரோடு, சேலம் ரோடு,மோகனூர் ரோடு மற்றும் பிரதான ரோடு (BAZAR ROAD) ஆகிய ரோடுகளில் உள்ள தங்கள் கடைகளின் முன்னால் ஒரு பொறுப்பான நபரை நியமித்து மேற்குறிப்பிட்ட நாள் (22.10.2024) மற்றும் நேரத்தில் வாகனங்களை நிறுத்தாமலும் தங்கள் கடைகளின் முன்னால் பெயர் பலகை மற்றும் விளம்பர போர்டுகளை வைக்காமலும் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Similar News