வீடு இடிந்து பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மகாராஜன் காசோலை வழங்கினார்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தாலம்பாறை ஊராட்சி தொப்பையாபுரம் கிராமத்தில் இன்று தொகுப்பு வீடு இடிந்து பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து,ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மகாராஜன் காசோலை வழங்கினார். உடன் திமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், வட்டாட்சியர் கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.