நெல்லை மாநகர டவுண் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் திருநாளான நேற்று அன்னைகாந்திமதி அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில், முத்தங்கி அலங்காரத்துடன் திருவீதிவுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.