காவலர்களுக்கு யோகா பயிற்சி : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு

கோவில்பட்டியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-10-20 04:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பணியின் போது ஏற்பாடும் மன அழுத்தத்தை போக்கி மன உறுதி அளித்திடவும், தற்கொலைகளை தடுக்கவும், பணியினால் காவலர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்குமான யோகா பயிற்சி டி.எஸ்.பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது இந்த யோகா பயிற்சியை யோகாலயா குணா தொகுத்து வழங்கினார். இதில், முதுகு வலியை போக்குவதற்காக தனு சிரசாசனம், மனதை ஒரு நிலை படுத்த யோக முத்ரா, சீரான சத்தியை அதிகரிக்க பச்சிமோத்தாசனம், சூரிய நமஸ்காரம் லாபிங் தெரபி, தியான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ், விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் மற்றும் கோவில்பட்டி, விளாத்திகுளம் உட்கோட்டங்களில் பணிபுரியும் 100 மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

Similar News