டி.என்.பாளையம் கல்குவாரி வெடி விபத்து வழக்கில் மேற்பார்வையாளர் கைது

டி.என்.பாளையம் கல்குவாரி வெடி விபத்து வழக்கில் மேற்பார்வையாளர் கைது

Update: 2024-11-23 04:23 GMT
டி.என்.பாளையம் கல்குவாரி வெடி விபத்து வழக்கில் மேற்பார்வையாளர் கைது டி.என்.பாளையத்தில் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியார் கல்குவாரி செயல் பட்டு வந்தது. பெருந்துறை தாச நாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மனைவி ஈஸ்வரி (வயது 65) என்பவருடைய பெய ரில் இந்த கல்குவாரிக்கான உரிமம் இருந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கல் குவாரியில் தொழிலாளர்கள் தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி வைத்து பாறைகளை அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் கோபிசெட்டிபாளையம் குருமந்தூர் அயலூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (50), கர்நாடக மாநிலம் பாலிமேடு கர்கேகண்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் ஈஸ்வரி, அவருடைய கணவர் லோகநாதன் (70) உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் கல்குவாரியின் மேற்பார்வையாளரான டி.என். பாளையம் பெரியார் வீதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரகாஷ் (34) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பிரகாசை போலீசார் நேற்று கைது செய்தனர். டி.என்.பாளையம் கல்குவாரி வெடி விபத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Similar News