பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Update: 2024-11-23 04:29 GMT
பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் கடந்த 19-ந் தேதி 12 மணி முதல் குடிநீருக்காக வினா டிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று இன்று 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 463 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97.39 அடியாக இருந்தது. அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Similar News