அப்பர் அமராவதி திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை
அப்பர் அமராவதி திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை
அப்பர் அமராவதி திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை தாராபுரத்தில் நடைபெற்ற பழைய மற்றும் புதிய அமராவதி பாசன விவசாயிகள் கூட்டத்தில் அப்பர் அமராவதி திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தாராபுரம் நல்லம்மை பாலிடெக்னிக் வளாகத்தில் பழைய, புதிய அமராவதி பாசன விவசாயிகள் கூட்டம் கொளத்துப்பாளையம் மகுடபதி தலைமையில் நடைபெற்றது. அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி பாசனத்தின் மூலம் 59 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 டிஎம்சி வரை கூடுதலாக நீர் வரத்து வரும்பொழுது கடலில் கலந்து வீணாகிறது.ஆனால் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன என்ற நிலைமையில் உள்ளனர். எனவே அப்பர் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றவேண்டும் .இது தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தில் பேசியதாவது, பார்த்தசாரதி புத்தூர் (புதிய அமராவதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்)அமராவதி அணையின் நீர்மட்டத்தை நம்பி நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் நிலுவையில் உள்ள பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளும் முழுமையாக மகசூல் எடுக்க முடிவதில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து விடுகிறது. எனவே கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க அப்பர் அமராவதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சந்தானகிருஷ்ணன் தளவாய்பட்டினம்( பழைய அமராவதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்) பாம்பாறு, தேனாறு,சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கூட்டாறு பகுதியில் அப்பர் அமராவதி1965ஆண்டே அணை கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தமிழ்நாடு,கேரளா மற்றும் வனப்பகுதியில் வருவதால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதால் திட்டம் சர்வே பணியாளவிலேயே முடிவடைந்தது. அதிக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே விவசாயிகள் ஒன்று திரட்டி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பெறலாம் .பாலசுப்பிரமணியவேணாடுடையார் (சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர்) விவசாயத்தை இளைய தலைமுறையினரும் விரும்பி செய்யவேண்டும். எனவே இத்திட்டம் அவசியம். அலங்கியம் பழனிச்சாமி ( தமிழக விவசாயிகள் சங்கம்) அமராவதி பாசனப்பகுதிகளில் கூடுதலாக தடுப்பணைகளை கட்டி விரயமாகும் தண்ணீரை சேமிக்கலாம்.திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பர் அமராவதி பற்றி பேசியபோது திட்டத்தை எடுத்துச் சொல்ல அதிகாரிகள் தயாராக இல்லை. எனவே விவசாயிகள் ஒன்றிணைந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் கொங்கூர் பழனிச்சாமி விவசாயி ஆண்டுதோறும் அமராவதியில் விரயமாகும் தண்ணீர் டெல்டா மாவட்டங்கள் வரை சென்று விவசாய நிலங்களை பாழ்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே இத்திட்டத்தை நிறைவேற்ற ஒருங்கிணைப்பு அவசியம். ஆஸ்திரேலியாவில் 5ஆண்டுக்கு தேவையான விவசாய தண்ணீரையும், 7 ஆண்டுக்கு தேவையான குடிநீரையும் சேமித்து வைக்கின்றனர்.எனவே விரையமாகும் தண்ணீரை சேமிக்க வேண்டியது அவசியம் . குளத்துப்பாளையம் துரைசாமிவிவசாயி இத்திட்டம் நிறைவேற்றபட்டால் உபரி நீர், உப்பாறு, நல்லதங்காள் அணைக்கும் விடலாம். அரசிடம் கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கும். இவ்வாறு விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் திருப்பூர், கருர் மாவட்டங்களில் உள்ள அமராவதி பாசனசங்க நிர்வாகிகள், விவசாயிகளை ஒரூங்கிணைத்து திட்டத்தை நிறைவேற்ற அரசின்கவனத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.