அரசூர் மதகிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு
அரசூர் மதகிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு
அரசூர் மதகிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்,விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் தலைமையில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு பலகட்ட போராட்டங்களில் சுமார் ஆறு முறை சிறைக்குச் சென்று உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு அரசூர் கால்வாய் மதகில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இந்த அரசு உத்தரவை ஏற்று உப்பாறு அணைக்கு அரசூர் கால்வாய் மதகிலிருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. உப்பாறு அணை பாதுகாப்பு சங்கத் தலைவர் அர்ஜுனன் ,உப்பாறு அணை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் வேலு.சிவக்குமார் தலைமையில் அரசூர் கால்வாய் மதகிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்ட போது உப்பாறு அணைக்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றியம் கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் யசோதாதேவி கண்ணன் வாதத்தொழுவு ஊராட்சி மன்ற தலைவர் சுதா தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை வரவேற்றனர்.