நாமக்கல்லில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை யினர் அதிரடி ஆய்வு!

பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களது புகார்களை ஆதாரங்களுடன் பதிவு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2024-10-24 15:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள லாரி பட்டறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்குவது வழக்கம் அதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பேக்கரிகளுக்கு ஆர்டர் தருவார்கள் அந்த இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் குடோன்கள் மற்றும் தனியார் திருமணமண்டபங்களில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. அந்த பணிகளை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர், மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக உரிமம் பெற்று தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் குடோன்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி
நாமக்கல் மாநகரில் பலகாரங்கள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையின் நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில்,உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முருகன், ரங்கநாதன், கார்த்திகேயன், முத்துசாமி, செல்வகுமார் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மொத்தம் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர். நாமக்கல்லில் தனியார் பேக்கரிக்கு சொந்தமான இனிப்பு வகை தயாரிக்கும் குடோன் நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் உள்ளது. அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த இனிப்புகளில் ஈ க்கள் இருந்தது மேலும் தொழிலாளர்கள் கையுறை அணியாமல் சுகாதாரமாக இல்லாமல் இனிப்பு வகைகளை தயாரித்து கொண்டிருந்ததை கண்டு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து சுகாதாரமான முறையில் இனிப்புகளை தயாரிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது... தீபாவளி பண்டிகையொட்டி மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, சுகாதாரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும், அதிகப்படியான கலர்கள் பயன்படுத்தக்கூடாது, இனிப்பு தயாரிக்கும் நபர்கள் கையுறை, முக கவசம் அணிந்திருக்க வேண்டும், உற்பத்தி தேதி, காலாவதியான தேதி அந்த பாக்கெட்டில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் ,இனிப்பு மற்றும் கார வகையை நியூஸ் பேப்பர் கொண்டு மூடக்கூடாது பட்டர் பேப்பர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்,இன்று மட்டும் 12 கடைகளில் சுகாதாரமற்ற பலகாரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதில், சுமார் 35 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அதோடு 12 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 18 பேருக்கு தற்காலிகமாக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தி சுத்தமான பலகாரங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம், மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களது புகார்களை ஆதாரங்களுடன் பதிவு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Similar News