வைகை அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளத
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்கள் மற்றும் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மழையால் அக்டோபர் 14 ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் அக்.,16ல் வினாடிக்கு 800 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டது. அது வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 58.17 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1515 கன அடி.