திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மார்க்கெட் கமிட்டிகளில் இ- நாம் மின்னணு சர்வர் பழுதானதால் விவசாயிகள் பாதிப்பு.

ஆரணி, அக்24 .திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 மார்க்கெட் கமிட்டிகளில் இ - நாம் சர்வர் பழுதானதால் அனைத்து பணிகளும் முடங்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-24 17:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 மார்க்கெட் கமிட்டிகளில் இ - நாம் சர்வர் பழுதானதால் அனைத்து பணிகளும் முடங்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முழுவதும் உள்ள மார்க்கெட் கமிட்டிகள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மின்னணு தேசிய வேளாண் சந்தை(இ-நாம்) திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் வியாபாரிகளிடம் விலை நிர்ணயிக்கப்பட்டு அதிக விலை கூறும் வியாபாரிக்கு விவசாயிகளின் விளை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய தொகையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முறையானது இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, தேசூர், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய மார்க்கெட் கமிட்டிகளில் இ-நாம் மின்னணு மூலம் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி முதல் மின்னணு சர்வர் பழுதானதால் அதிகாரிகளும், வியாபாரிகளும் பணி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அக் 21 அன்று விவசாயிகளின் விளை பொருட்கள் எடையிடப்பட்டு அதற்கான ஏலம் நடைபெறவில்லை. இதேநிலை 2 நாட்களாக தொடர்ந்தது. சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியை பொருத்தவரை தினமும் 5 ஆயிரம் முதல் 6ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இதனால் வியாபாரிகளால் கொள்முதல் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மார்க்கெட் கமிட்டி அலுவலர்களிடம் கேட்டபோது கடந்த மூன்று தினமாக இதுபோன்று சர்வர் வேலை செய்யவில்லை தமிழக முழுவதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை இரவுக்குள் சீராகும். அதனை தொடர்ந்து விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயிக்கப்பட்டு எப்போதும் போல் மார்க்கெட் கமிட்டி செயல்படும் என தெரிவித்தனர்.

Similar News