விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருந்தாலும் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என திருப்பூரில் ஐமுமுக தலைவர் ஹைதர் அலி பேட்டி!
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருந்தாலும் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என திருப்பூரில் ஐமுமுக தலைவர் ஹைதர் அலி பேட்டி!
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருந்தாலும் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது – திருப்பூரில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி பேட்டி! திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வெடி பொருட்கள் தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை திருப்பூர் மாவட்ட ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஹைதர் அலி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , பாண்டியன் நகர் வெடி பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்து உள்ளனர் . இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலிம்பிக் போட்ட்டியில் கல்ந்து கொள்வதற்காக சென்ற விணோஷ் போகத் 100 கிராம் எடை கூடுதல் காரணமாக வெளியேற்றப்பட்டார். ஒலிம்பிக் போட்டி விதியின் காரணமாக வெளியேற்றப்பட்டார் என கருதப்பட்டது ஆனால் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே அவர் போட்டியில் பங்கேற்க விடாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதேபோல் , அமெரிக்க நாட்டில் கேரம் போட்டியில் கலந்து கோள்வதற்காக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஹசிமா என்பவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வீரங்கனையான அவருக்கு தமிழக அரசு நிதிஉதவி அளித்துள்ளது. ஆனால் விசா விண்ணப்பிக்கப்படும்போது அவர் முறையான விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. காரணம் அவர் இஸ்லாமியர் என்பதால் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக நிராகரிக்கப்படுகிறார். ஒன்றிய அரசு நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருந்தாலும் பாகுபாடு காட்டக்கூடிய வகையில் நடந்து கொள்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கசாவடிகள் அதிகளவில் உள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலை வேலம்பட்டி சுங்கச்சாவடியை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன்,மாநில செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகமது, மாநில துணைச் செயலாளர் கோவை ரபீக்,ஐக்கிய சமூக நீதிப் பேரவை செயலாளர் ஹபீப், மாவட்ட தலைவர் அபு பைசல், மாவட்ட செயலாளர் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.