எடப்பாடி நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைப்பெற்ற நகர மன்ற சாதாரண கூட்டத்தில் 69 தீர்மானங்களுக்கு, மன்ற அனுமதி கோரிய அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகர்மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் பாஷா தலைமையில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் முன்னிலையிலும் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 69 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது அப்போது 1வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் காளியப்பன் மற்றும் ராம்குமார் எங்கள் வார்டுகளில் குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு சரியான முறையில் பராமரிப்பது இல்லை இதனை பலமுறை நகர மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மன்றத்தின் முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் இந்த முறை நிச்சயம் சரி செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, பழுதடைந்த சாலையை காங்கிரட் சாலையாக புதுப்பித்தல், பழுதடைந்த மின்விளக்கு புதுவித்தல், பழுதடைந்த மழை நீர் வடிகால் சீரமைத்தல், பழைய ஆழ்துளை கிணற்றுக்கு சின்டெக்ஸ் டேங்க் வைத்து மின் மோட்டார் அமைத்தல் போன்ற 69 தீர்மானங்களும் மன்றம் அனுமதி வழங்கி நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.