ஆரணியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனை போலீசார் கைது செய்ததால் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பாஜகவினர் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-12-04 17:38 GMT
ஆரணி, திருப்பரங்குன்றத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனை போலீசார் கைது செய்ததால் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பாஜகவினர் வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் மாதவன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சரவணன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், வடக்கு மண்டல தலைவர் ராஜேஷ், விவசாயி மாவட்ட நிர்வாகி முருகன், முன்னாள் மாவட்ட நிர்வாகி அலமேலு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பவித்ரன், மேற்கு மண்டல தலைவர் எம்.டி.ஆறுமுகம், நெசவாளர் அணி நிர்வாகி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News