மேட்டுமருதூரில் அஇஅதிமுக 5 ஆவது வார்டு சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள்;

Update: 2025-12-05 02:38 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூர் 5 ஆவது வார்டு பகவதி அம்மன் கோவில் எதிரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக மருதூர் பேரூராட்சி 5 ஆவது வார்டு கிளைச் செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் 5 ஆவது வார்டு பொறுப்பாளர்கள் காந்தி, ரெங்கராஜ், நடராஜ், செல்லையா, தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News