குளித்தலை அஇஅதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
குளித்தலை நீதிமன்ற வளாகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலர்களை தூவி அஞ்சலி;
கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்ற வளாகம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் காஜா மொய்தீன், நாகராஜன், மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் முருகன், பிச்சைமுத்து, தங்கதுரை, அச்சுதராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.