மண்டையூர் பிதாம்பட்டியை சேர்ந்த விசாலாட்சி மண்டையூர் கிராம சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் தலை, கை, கால், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மண்டையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.