ராசிபுரம் அருகே மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து.

ராசிபுரம் அருகே மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து.

Update: 2024-10-25 13:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரி(58)இவர் தனது மாட்டு வண்டி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீரை விநியோகம் செய்து வருகிறார். இந்த நிலையில் மாரி பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டு வண்டியில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு குடிநீர் விநியோகம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மாட்டு வண்டியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்படுத்திவிட்டு தனியார் பேருந்தானது நிற்காமல் சென்றதாகவும் பின்னர் சேலத்தில் இருந்து கிளம்பிய தனியார் பேருந்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே மீண்டும் வந்தபோது மாட்டு வண்டி உரிமையாளர் மாரி தனது மாட்டை கொண்டு சாலையில் பேருந்து வழி மறைத்து பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மாட்டு வண்டி உரிமையாளர் மாரி கூறுகையில் தான் குடிநீர் விற்பனை செய்து கொண்டிருந்தத போது பேருந்து எனது மாட்டு வண்டியின் மீது விபத்து ஏற்படுத்தியதாகவும், வண்டியின் சக்கரத்தின் டயர் கிழிந்ததாக கூறினார்.இதற்கு நான் 5000 ரூபாய் செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.

Similar News