கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 13 ஆவது வார்டை மறுசுழற்சி அடிப்படையில் தனி (எஸ்.சி) வார்டாக மாற்றிடவும், 8வது வார்டு பிச்சம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தியும், 2 வது வார்டு அரசவள்ளி தெருவில் புது பொதுக் கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தியும், பேரூராட்சியில் சமுதாயக்கூடம் கட்டி தர வலியுறுத்தியும், முனையனூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள காலணி வீடுகளுக்கு மராமத்து பணி செய்திட வலியுறுத்தியும், சேங்கல் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான முறையில் கட்டடம் கட்டி சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் எனவும் , முனையனூர் சமத்துவபுரத்தில் உள்ள சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் எனவும், பாலராஜபுரம் ஊராட்சி வீரராக்கியத்தில் இருந்து சின்னம்மநாயக்கன்பட்டிக்கு செல்வதற்கு குகைவழிப்பாதை அமைத்து தர வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற லாட்டரி விற்பனை தடுக்க வேண்டும், கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணராயபுரம் Dr.அம்பேத்கர் பேருந்து நிறுத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ.மகாமுனி (எ) வன்னியரசு தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா.உதயநிதி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு கண்டன உரையாற்றினார். இதில் சேங்கல் பூபதி, ஆண்டிபாளையம் உதயகுமார், சட்டக்கல்லூரி மாணவர் ரஞ்சித், முனையனூர் பசுபதி, கோவக்குளம் பெருமாள், கோமதி, நாகலட்சுமி, காவியா, இளஞ்சியம், நித்தியா மற்றும் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கம் எழுப்பினர். நிகழ்ச்சி நிறைவாக 13 ஆவது வார்டு கிளைச் செயலாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.