வெள்ளக்கோவில் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத குழந்தை பரிதாபமாக பலி
வெள்ளக்கோவில் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத குழந்தை பரிதாபமாக பலி வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா குழந்தை கவுண்டனூர் சீதாப்பள்ளியத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவருடைய மனைவி அம்சவல்லி இவர்களுடைய குழந்தை கவின்(6) மற்றும் பவியாலினி (10 மாதம்) உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று அங்கேயே தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வருகின்றனர். தற்போது அருள்முருகன் தனது குடும்பத்துடன் வெள்ளகோவில் அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் நந்தகுமார் என்பவருடைய தோட்டத்தில் மரம் வெட்டும் வேலை செய்து வருகிறார். நேற்று மரத்தை ஏற்றி செல்வதற்காக லாரி வந்துள்ளது. அங்கு இரு குழந்தைகளையும் மரத்துக்கு அடியில் விளையாட விட்டு விட்டு கணவன் மனைவி இருவரும் மரம் ஏற்ற சென்று விட்டனர். அப்போது லாரி பவி யாழினி மீது ஏறிவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அருள் முருகன் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் லாரியை ஒட்டிய தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.