கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதியில் மழையினால் வீடு இடிந்தது
உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி. உப்புத்துறை பகுதியில் இரவு பெய்த கனமழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது . இந்நிலையில் கடமலைக்குண்டு பகுதியிலும் மழை பெய்து வரும் நிலையில் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி. உப்புத்துறை பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையினால் வீட்டின் மேற்கு பக்க மண் சுவர் இரவு 12 மணியளவில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் உயிர், பொருட் சேதங்கள் ஏதுமில்லை.