அதிமுகவின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது - இபிஎஸ்

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அடுத்த சித்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Update: 2024-10-25 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அதிமுக வலுவான கூட்டணி இல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.  இது முதல்வருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.  எதன் அடிப்படையில் முதல்வர் பேசுகிறார் என்றும் தெரியவில்லை.  நாடாளுமன்றத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடுதான் ஒப்பிட வேண்டும்.  2019ல் பிரதமர் வேட்பாளரை முன்னிருத்தி வாக்குகளை கேட்டோம். அப்போது எடப்பாடி தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம்.  ஆனால் தற்போது 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம்.  இதன்மூலம் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.  அதைதான் நான் கூறினேன்.  ஆனால் நாமக்கல்லில் ஸ்டாலின் பேசும் அதிமுகவின் வாக்குகள் குறைந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாவும் பேசுகிறார்.  நாமக்கல் எம்பி தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது. இதன் மூலம் திமுகவின் செல்வாக்குதான் குறைந்துள்ளது.  2019வை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குவங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது.  திமுகவை தாங்கி பிடிப்பது ஊடகங்களும் கூட்டணியும்தான்.  ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிட்டால் திமுக காணாமல் போகும்.  திமுக சாதனைகளை நம்பி அல்ல கூட்டணியை நம்பிதான் தேர்தலில் நிக்கிறது.  திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிவிட்டு, கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும் ஆனால் பிளவு இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்றுதான் அர்த்தம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள்மாதேஷ், மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள்  ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News